என்னுடைய தகுதிக்கு அமைச்சர் ஓஎஸ் மணியனிடம் எல்லாம் விவாதிக்க மாட்டேன். முதல்வர்தான் என் தகுதிக்கு இணையானவர். அவரிடம் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பேன் என திமுகவை சேர்ந்த துரைமுருகன் கூறியிருந்தார். இதற்கு அமைச்ச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை கிண்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம், ஓ.எஸ்.மணியன் என்னுடைய தகுதிக்கு இணையாக இல்லை. முதல்வர்தான் என் தகுதிக்கு இணையாக உள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் மட்டும்தான் விவாதிப்பேன் என்று துரைமுருகன் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர் பத்திரிக்கையாளர்கள்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம் அதில் தவறு கிடையாது. திமுகவிற்குள் பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறேன். ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கு அங்கு முதல்வர் போட்டி நடக்கிறது. அந்தப் போட்டியில்தான் என் தகுதி சிஎம், நான் சிஎம் கூடத்தான் விவாதம் செய்வேன் என்று துரைமுருகன் கூறியுள்ளார் என்றார்.

Loading...