மக்கள் நல இயக்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கிய நடிகர் விஷால் தங்கள் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வர உள்ளது, அது நம்ம மண்ணு எனவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார் நடிகர் விஷால்.

இந்நிலையில் நடிகர் விஷாலின் இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது பதில் அளித்தார். அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம். இதில் யார் வேண்டுமென்றாலும் டம்ளரில் தண்ணீர் எடுத்து குடிக்கலாம். அதில் நடிகர் விஷால் தண்ணீர் எடுத்து குடிப்பதற்கு நாங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல நடிகர் விஷால் அதிகாரம் பெற்றவர் கிடையாது என்றார் அமைச்சர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் வரும்போது நல்ல திட்டங்களை தந்த எங்களை தான் மக்கள் ஆதரிப்பார்கள். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும் என்றார்.