எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா?: அமைச்சர் பகிரங்க மிரட்டல்!

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுகவை ரஜினி விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா? என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

திமுக தலைவர் கருணாநிதி திரைத்துறையினர் சார்பாக அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய ரஜினிகாந்த், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என்றார்.

மேலும் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளாததை விமர்சித்த ரஜினிகாந்த், நீங்கள் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா என கேட்டார் இது அதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இதுபோன்று அரசியல் பேசுவது நல்லதல்ல. அரசியல் வரலாறே தெரியாமல் வாய் புளித்தது, மாங்காய் புளித்தது என்று பேசியது ரஜினியின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

இதுபோல் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இருந்ததா. அப்போது ஓடி ஒளிந்து கொண்டார் ரஜினி. அவர்கள் முன்னால் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என பகிரங்கமாக மிரட்டினார் அமைச்சர் ஜெயகுமார்.

Recent Posts

ஹெல்மெட் போட்டு வங்கியில் கொள்ளை – பீகாரில் துணிகர சம்பவம் !

பீகாரில் கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கியில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆறு பேர் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்நகர்ரில் ஐசிஐசிஐ வங்கியின்… Read More

4 hours ago

பிரபுதேவா நடிப்பில் ஊமைவிழிகள் – டிவிட்டரில் தனுஷ் வெளியிட்ட போஸ்டர் !

பிரபுதேவா நடிக்கும் புதிய படமான ஊமைவிழிகள் என்ற புதிய படத்தின் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார். பிரபுர்தேவா நடிப்பில் தனஞ்செயன் தயாரிக்கும் புதிய படமான ஊமை விழிகள் என்ற… Read More

4 hours ago

எனக்கு ஓட்டுப் போட்ட 18 லட்சம் பேர்தான் தமிழர்கள் – சீமான் சர்ச்சைப் பேச்சு !

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்கள் கட்சிக்கு ஒட்டுப் போட்ட 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள் எனப் பேசியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கிரவாண்டி மற்றும்… Read More

4 hours ago

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…

தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். Tamil movie actor krishnamoorthy passed away - நான் கடவுள், தவசி… Read More

13 hours ago

சி வி சண்முகம் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் – வளர்ப்பு மகன் தற்கொலை !

சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகத்தின் தங்கை மகன் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அமைச்சரின் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி வி… Read More

14 hours ago

பொது இடத்தில் போலிஸ் காரர் மகன் படுகொலை – காதல் திருமணத்துக்கு உதவியதால் நேர்ந்த கொடூரம் !

மதுரை தல்லாக்குளம் பகுதியில் கோபால்சாமி என்ற வாலிபர் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை கோ புதூர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் என்ற… Read More

15 hours ago