நேற்றைய அரையிறுதிப் போட்டியில் நான் விளையாடி இருந்தால் இந்தியா ஒருவேளை வெற்றி பெற்றிருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக நியுசிலாந்து அணியிடம் தோற்று உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ’மக்களவைத் தேர்தலில் அதிமுக சிறு தோல்வியடைந்தது போல், இந்தியா அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது. விரைவில் இந்திய அணி மீண்டு வரும். ஒருவேளை நான் விளையாடியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.