உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ளார் எஸ்.பி.வேலுமணி. இவரை நான்கு தலை கொண்ட பிரம்மா என புகழ்ந்து தள்ளியுள்ளார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்.

தூத்துக்குடி சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகினால் தான் சட்டசபைக்கு வருவோம் என கூறியிருந்த திமுக உறுப்பினர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இன்றைய கூட்டத்தில் திமுக உறுப்பினர் தாமோ அன்பரசன் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால், உள்ளாட்சி அமைப்பு தலையில்லாத உடலாக செயல்படுவதாக கூறினார். இதற்கு பாதிலளித்த துணை முதல்வர் ஓபிஎஸ் நான்கு தலை கொண்ட பிரம்மாவாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்படுவதாக புகழ்ந்தார்.

அதன் பின்னர் உள்ளாட்சித்துறை குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்படாவிட்டாலும் அதிகாரிகளை கொண்டு உள்ளாட்சி பணிகள் தொய்வில்லாமல் நடந்து வருவதாக குறிப்பிட்டார்.