அதிமுக அமைச்சர் வீரமணி நில நபர்களுடன் பேரம் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட அதிமுகவில் அதிகாரத்துடன் வலம் வருபவர் அமைச்சர் கே.சி.வீரமணி. தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சரான இவர் மீது சில நில மோசடி புகார்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ரூ.300 கோடி மதிப்புள்ள நில விவகாரத்தில் வீரமணி தங்களை மிரட்டி வருவதாக நீதிமன்றத்தில் இருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இன்று காலை அவரது வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒரு ஹோட்டலில் அவர் சிலருடன் பேரம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் “பணத்த வாங்கிடலாம்னு பேசி இருக்கீங்க. நானே வந்து நிக்குறேன்.. நான் என் பவர யூஸ் பன்னிக்கிறேன். அது எங்க எப்படி யூஸ் பண்ணனும்னு எனக்கு தெரியும். இவர் இந்த பேச்சு பேசுறார். அந்த பணம் எப்படி வந்ததுன்னு எனக்கு தெரியும்” என அவர் பேசுவது பதிவாகியுள்ளது.

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் இந்த நிலையில், இந்த வீடியோ வெளியானது அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.