செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

விஷ்ணு-அமலாபால் படத்தின் டைட்டில் இதுதான்

12:05 மணி

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன்’ வெற்றிக்கு பின்னர் நடிகர் விஷ்ணுவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே அவர் ‘கதாநாயகன்’, ‘பொன் ஒன்று கண்டேன்’, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு புதிய படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஷ்ணு நடித்த வெற்றிப்படமான ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் இயக்கும் இந்த படத்தில் விஷ்ணுக்கு ஜோடியாக பிரபல நடிகை அமலாபால் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்போது ‘மின்மினி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும், இந்த படம் காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு படமாக உருவாகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393