தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா.
இவரும், இவரது மனைவியும் கூலித் தொழிலாளிகள்.
இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இத்தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டாவது
மகள் ராகவி(11), 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் சிறுமிகள்
இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். பெற்றோர் இருவரும்
வேலைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் காமுகன் ஒருவன், ராஜாவின் வீட்டுக்குள்
புகுந்து தனியாக இருந்த சிறுமி ராகவியை
கொடுமைப்படுத்தி தாக்கி, மேலும், காம்பஸ் கருவியால்
காலை குத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

இதனால் மனமுடைந்த சிறுமி ராகவி தனக்கு நேர்ந்த
கொடூரத்தை நினைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர்
சிறுமியின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு
மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர், இதில்
தொடர்புடைய காமுகனை பிடிக்க வலைவீசி தேடி
வருகின்றனர்.