மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ திரைப்படம் நல்ல மேக்கிங் என்றாலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் எதிர்பார்த்த வசூலை பெறாத படமாக இருந்தது. ஒரு சூப்பர் ஹிரோ கதையை ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஜனரஞ்சகமாக கொடுக்கவில்லை என்பது பலரது விமர்சனமாக இருந்தது

இந்த நிலையில் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படமும் ஒரு சூப்பர் ஹிரோ சம்பந்தப்பட்ட கதை என்றும், ஆனால் முகமூடியில் செய்த தவறை இந்த படத்தில் செய்யாமல் இதை ஒரு சூப்பர் ஹிட் படமாக ஆக்க மிஷ்கின் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சோஷியல் நெட்வொர்க்கினால் ஏற்படும் பிரச்சனைகளை ஒரு சூப்பர் ஹிரோ எப்படி சமாளிக்கின்றார் என்பதை நகைச்சுவையுடன் சொல்லப்படவுள்ள இந்த படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் இந்த படம் 3Dயில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது