நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா முதன் முதலாக தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார். கவுதம் கார்த்திக் அவரது அப்பா கார்த்திக் நடிக்கும் சந்திரமௌலி படத்தில் தான் சிவகுமாரின் மகள் பிருந்தா பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார்.

அப்பா மகன் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள மிஸ்டர் சந்திரமௌலி படத்தை திரு இயக்கியிருக்கிறார். கார்த்திக் கௌதம் கார்த்திக் இந்த படத்தில் அப்பா மகனாகவே நடித்திருக்கின்றனர். இதில் ரெஜினா, வரலட்சுமி சரத்குமார் இருவரும் நடித்திருக்கின்றனர்.

பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் மகன்கள் அப்பா வழியில் திரைத்துறையில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அவரது மகள் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு குடும்பம் குழந்தைகள் என்று செட்டிலாகினார். இதுவரை திரைத்துறையில் அடியெடுத்து வைக்காமல் இருந்த அவரது மகள் பிருந்தா அப்பாவின் ஒவியத்திறமையை கொண்டுள்ளார்.ஒவியத்திறமையோடு பிருந்தா பாடும் புலமையை பெற்றவா். இந்நிலையில் விக்ரம் வேதா புகழ் இசையமைப்பாளர் சி.எஸ். சாம் மூலம் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படமானது படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வெளிவர ரெடியாகி வருகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் சூர்யா, விஷால் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். டைட்டில் பாடலான மிஸ்டர் சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்கின் தங்கையான பிருந்தா பாடியுள்ளார். மகளை வாழ்த்தி சிவகுமார் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த படத்தின் மூலம் சூர்யாவின் தங்கை பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார்.