முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கருணாநிதியின் மறைவை அடுத்து அவர் மீண்டும் திமுகவில் சேர்க்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவில் மு.க.அழகிரி தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்தார். தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்த அவர் கட்சிக்கு எதிராக பேசியதாக கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கருணாநிதி இறந்ததையடுத்து மீண்டும் குடும்பத்துடன் ஐக்கியமாகியுள்ள அழகிரி மீண்டும் திமுகவில் இணைய உள்ளாதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கருணாநிதி இறந்ததால் அவரது திருவாரூர் தொகுதியில் அழகிரி போட்டியிட வேண்டும் என சிலர் சொல்லி வருவதாகவும், ஆனால் அழகிரி தனக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக சிலரிடம் கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன. அழகிரியின் விருப்பம் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டு அவர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்ததாக பேசப்படுகிறது.

மேலும் கருணாநிதியின் காரியம் முடியுற வரை அரசியல் எதுவும் பேச வேண்டாம் என அழகிரி இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அழகிரி ரிட்டர்ன்ஸ் குறித்து செய்தி வெளியாகலாம்.