திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் முதலில் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த கோபாலபுரம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  அக்கா இருந்திருந்தால் கருணாநிதிக்கு மெரினாவில் இடம்?: மனம் திறந்த சசிகலா!

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்சியினர், உடன்பிறப்புகள், பொதுமக்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏன் அஞ்சா நெஞ்சன் என புகழப்படும் அவரது மகன் மு.க.அழகிரியையே தேம்பி தேம்பி அழ வைத்துள்ளது திமுக தலைவர் கருணாநிதியின் இழப்பு.

இதையும் படிங்க பாஸ்-  கலைஞருக்கு மெரினாவில் இடம்?: காலை 8 மணிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். குறிப்பாக அவரது மகள் செல்வி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார். எதற்கும் அஞ்சாத, தைரியமான மு.க.அழகிரி கூட கருணாநிதியின் உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுதுகொண்டே இருந்தார். அவரை மு.க.தமிழரசு, செல்வி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தேற்ற முயன்றனர்.