Home அரசியல் பதிலளிக்க மறுத்துவிட்டுச் சென்ற கலைஞரின் பிள்ளை மு.க.அழகிரி!

பதிலளிக்க மறுத்துவிட்டுச் சென்ற கலைஞரின் பிள்ளை மு.க.அழகிரி!

விரைவில் எனது பலத்தை நிரூபிப்பேன், உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் என கூறிவந்த மு.க.அழகிரி ஒரேயடியாக ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என கூறி அதிர்ச்சியளித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த பதில் எதிர் தரப்பில் இருந்து வரவில்லை.

செப்டம்பர் 5-ஆம் தேதி கலைஞர் சமாதி நோக்கி ஒரு லட்சம் பேருடன் பேரணி செல்ல உள்ளதாக கூறியிருந்தார் மு.க.அழகிரி. இதற்காக தொடர்ந்து பத்து நாட்களாக தனது ஆதரவாளர்களுடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் அவர்.

இந்நிலையில் நேற்று ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் மு.க.அழகிரி. அப்போது, நான் கலைஞரின் பிள்ளை, சொன்னதை செய்வேன். சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்றார். இதனையடுத்து ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியும் அழைப்பு ஏதும் வரவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மு.க.அழகிரி பதிலளிக்க மறுத்துவிட்டுச் சென்றார்.

மேலும் இந்த பேரணியில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் வரும் கலைஞரின் தொண்டர்கள் யாருக்கும் எந்த இடையூறும் செய்யாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையும் வெளியிட்டுள்ளார் அழகிரி.