திமுகவில் ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மு.க.அழகிரி தற்போது தனது நிலைப்பாடை மாற்றியுள்ளதாக அவரது வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் திமுகவில் இணைய அழகிரி பகிரீத முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி இறந்த பின்னர் திமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள் என கூறி விரைவில் தனது பலத்தை நிரூபிக்க உள்ளதாக சவால் விட்ட அழகிரி ஒரு லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்தார்.

தனது தொண்டர்களை ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்த அழகிரி வந்திருந்த கூட்டத்தை பார்த்து தன்னால் அறிவித்தபடி கூட்டத்தை கூட்ட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார். தான் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் சேராததால் அழகிரி தனது நிலைப்பாடில் இருந்து பின்வாங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இதனையடுத்து தனக்கு நெருக்கமானவர்களிடம் அழகிரி கூறியதாக சில தகவல்கள் உலா வருகிறது. ஸ்டாலின் போன் செய்தால்கூட போதும், பேரணியை ரத்து செய்துவிடலாம். கட்சித் தலைவராகவும், முதல்வராகவும் ஸ்டாலினே இருந்திட்டு போகட்டும். நான் தடையாக இருக்க மாட்டேன். வேறு கட்சியில் நான் சேர மாட்டேன் என்ற தகவலை ஸ்டாலினிடம் சொல்லிவிட்டால் போதும் என ஸ்டாலின் தரப்பில் நெருக்கமாக உள்ளவரை தேடி வருகின்றார் அழகிரி என கூறப்படுகிறது.