அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல்கள் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமைச்சர் டைம்ஸ் நவ் ஊடகத்தின் மீது வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் வேலுமணியின் ஊழல் புகார் குறித்த விசாரணை நேர்மையாக நடைபெற, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் திமுக மனு அளித்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது: தமிழிசை அட்டாக்!

இதனையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும் தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையைக் கொள்ளையாட்சித் துறையாக உருக்குலைத்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  எடப்பாடிக்கு கொடி பிடித்துக்கொண்டே குழி பறிக்கும் அதிகாரிகள்: தினகரன் அட்டாக்!

அமைச்சரின் பினாமி நிறுவனங்கள் அமைச்சரின் துறைகளில் முழு ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களையும் பெறுகின்றன. வேலுமணி அமைச்சரான பிறகு, இந்நிறுவனங்களின் பிசினஸ் உயர்ந்திருக்கிறது. அமைச்சர் வேலுமணி ஊழல் திருவிளையாடல்கள் அரங்கேற்றி அதிமுக அமைச்சரவையில் மற்றவர்களையெல்லாம் தோற்கடித்து, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் என ஸ்டாலின் மிக கடுமையாக சாடியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  கருணாநிதியை அடக்கம் செய்ய முடியாது: திமுக தரப்பு அதிரடி வாதம்!

மேலும் அமைச்சரின் ஊழல் குறித்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.