மானம், கௌரவம் எல்லாத்தையும் இழந்து எடப்பாடியின் கைகளை பிடித்து கெஞ்சினேன்: ஸ்டாலின் வெளியிட்ட ரகசியம்!

திமுக தலைவர் கருணாநிதி இறந்த போது அவரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என முரண்டு பிடித்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்று மெரினாவில் இடத்தை பெற்றனர் திமுகவினர். இது குறித்து தற்போது நடந்து வரும் திமுக செயற்குழுக் கூட்டத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் பக்கத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதே கருணாநிதியின் முடிவு. அதை நிறைவேற்ற முடியாத வகையில் தகவல்கள் அரசிடம் இருந்து கிடைத்தன.

பின்னர் நாங்கள் சென்று பார்த்தோம். மானம், கௌரவம், சுயமரியாதை எதுபோவதாக இருந்தாலும் பரவாயில்லையென்று முதலமைச்சரை சந்தித்தேன். விதிமுறைகளில் வாய்ப்பில்லை, சட்டரீதியான நடவடிக்கைக்கும் வாய்ப்பில்லை என மறுத்தார் முதலமைச்சர்.

கருணாநிதிக்காக மெரினாவின் இடம் வாங்க, முதலமைச்சரின் கைகளை பிடித்து கெஞ்சிக்கேட்டேன். கடைசியாக பார்ப்போம் என்றார் அவர். மீண்டும் மெரினாவில் இடம் கேட்டு துரைமுருகன் கடிதம் எழுதி கொண்டு போய் கொடுத்தார். ஆனால் 10 நிமிடங்களுக்குள் வந்துவிட்டார். பின்னர் தொலைக்காட்சியில் தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.

பின்னர் நீதிமன்றத்தை நாடி சாதகமான தீர்ப்பை பெற்றது வழக்கறிஞர் குழுவினர். அவர்களுக்கு தான் இந்த பெருமை சேரும். அன்று நமக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லையென்றால் கருணாநிதியின் உடலுக்கு பக்கத்தில் என்னை தான் புதைக்க வேண்டிய சூழல் வந்திருக்கும் என தெரிவித்தார்.

Recent Posts

அண்ணன் மீது காதல்… தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….

தவறான உறவு முறையில் ஏற்பட்ட காதல் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவையாறு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கு பெண் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து… Read More

38 mins ago

காதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்

காதில் ஏற்பட்ட பிரச்ச்னைக்கு தவறுதலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அடுத்தள்ள பட்டரைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள்… Read More

1 hour ago

எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்துஜா. தொடர்ந்து சூப்பர் டூப்பர்,மெர்க்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.   இதில் சூபார் டூப்பர் படத்தில் கிளாம்ரில்… Read More

2 hours ago

அடுத்த விக்ரம் துருவ்! மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..

நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கில் 2017-யில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’.… Read More

3 hours ago

பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்

தீபாவளி நெருங்கும் நேரத்தில் அது தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வருகிற 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, சென்னை போன்ற… Read More

3 hours ago

இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ். முன்னாள ரவுடியான இவர் தற்போது ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வந்தார். திருமணம் ஆன இவருக்கும் பாடி கலைவாணர் தெரு அருகில் இட்லி… Read More

3 hours ago