திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வழக்கம் போல தம்பி ஸ்டாலினை விமர்சித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அழகிரி, நான் திமுகவில் இணைவதில் ஒன்றும் தவறில்லை. திமுகவில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கு பிறகு திமுக தேர்தலில் ஒருமுறைகூட வெற்றிபெறவில்லை. செப்டெம்பர் 5 பேரணிக்கு பிறகு தமிழக மக்கள் என்னை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியவரும் என்றார்.

மேலும் கலைஞர் இருந்தபோதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான் இந்த சூழலில் பதவிக்கு ஆசைப்படுவேனா. ஆனால் அவசர அவசரமாக திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ஏற்க செல்கிறார் என அதிரடியாக தெரிவித்தார் மு.க.அழகிரி.