ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். ஹிந்தி நடிகையான இவர் சமீபத்தில் பிரதமர் மோடியின் பால்ய  வாழ்க்கையை சித்தரிக்கும் குறும்படமான சலோ ஜீத்தே ஹெய்ன் திரைப்படத்தை கங்கனா கண்டு ரசித்தார்.

அதை பார்த்து விட்டு இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மோடி தான் சரியான ஆள் எனக் கூறினார். மேலும், அவர் பெற்றோரால் இந்த அளவுக்கு முன்னேறவில்லை எனவும், தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னேறி இன்று பிரதமர் பதவியை அலங்கரித்து வருகிறார். ஜனநாயகத்தின் மிகச் சிறந்த தலைவர் மோடி தான் எனக் கூறினார்.

நிச்சயமாக அவர் தான் மீண்டும் வர வேண்டும். நம் நாடு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. அதை மீட்பதற்கு ஐந்து ஆண்டுகள் போதாது. அதனால் மீண்டும் மோடி வந்தால் மட்டுமே நம் நாட்டிற்கு நலம் பயக்கும் என கங்கனா ரனாவத் கூறி இருக்கிறார்.