Connect with us

அரசியல்

கருத்துகணிப்பு இருக்கட்டும்! என்ன சொல்கிறது மோடி ஜாதகம்?

Published

on

Modi Astrology – இந்தியாவின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார் என ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவே அதிக இடங்களை பிடிக்கும் என தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. எனவே, மோடியே அடுத்த பிரதமர் ஆவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துக்கணிப்புகள் ஒரு புறம் எனில், ஜாதகம், எண் ஜோதிடம், தேர்தல் தேதி மற்றும் மோடியின் ஜாதகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டதிலும் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் எனவும் மோடியே பிரதமர் ஆவார் எனவும் ஜோதிடர் ஹரி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவரான பிரபல ஜோதிடர் ஹரி சில கணிப்புகளை கணித்துள்ளார். அதாவது, கடந்த முறை மோடி பிரதமான போது, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தேதியின் கூட்டு எண்ணிக்கை, எண் ஜோதிடப்படி பாஜக என்கிற ஆங்கில எழுத்தின் கூட்டு எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து சில கணிப்புகளை கணித்துள்ளார்.

2014ம் ஆண்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தேதி 16-05-2014. அதன் கூட்டு எண்ணிக்கை 1+6+5+2+0+1+4 = 19 என வருகிறது. அதேபோல், பாஜகவின் கூட்டு எண்ணிக்கை, அதாவது BJP-ல் B என்பது ஆங்கில எழுத்துக்களில் 2வது இடத்தில் வருகிறது. அதேபோல், J எழுத்து 10ம் இடத்திலும், P எழுத்து 16ம் இடத்திலும் வருகிறது. அதன் கூட்டுத்தொகை 28. எனவே, 19 ஐ 28 ஆல் பெருக்கினால் 532 வருகிறது. அதை 2 ஆல் வகுக்க 266. அதோடு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தேதி 16 ஐ கூட்டும் போது 282 வருகிறது. இதுதான் 2014ம் ஆண்டு பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளாகும்.

அப்படி பார்க்கும்போது இந்த முறை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தேதி 23-05-2019. எனவே, 2+3+5+2+0+1+9 என்பதன் கூட்டணி 22 வருகிறது. பாஜக எண்ணின் கூட்டு எண்ணிக்கை 28. இரண்டையும் பெருக்கினால் 616. அதை 2ல் வகுக்க 308 வருகிறது. அதோடு, தேர்தல் முடிவு வெளியாகும் தேதி 23ஐ கூட்டினால் (308+23) 331 வருகிறது.
பெரும்பாலன கருத்துக்கணிப்புகள் இந்த முறை பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் எனக்கூறிவருகிறது. எனவே, இந்த கணக்கு அந்த முடிவுடன் ஒத்துப்போகிறது.

எண் கணிதப்படி மட்டுமல்ல. மோடியின் ஜாதகப்படியும் இந்த முறை அவரே பிரதமராக வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர் ஹரி கூறுகிறார்.

மோடியின் ஜாதகப்படி தற்போது விருச்சக லக்ணாதிபதி செவ்வாய் திசை துவங்கவுள்ளது. எனவே, அவரே (செவ்வாய்) லக்ணத்திற்கும், 6ம் இடத்திற்கும் அதிபதி ஆவார். எனவே, லக்கணத்திற்கு சாதகமாகவே பலன் அளிப்பார். 6ம் இடம் என்பது எதிரிகள் ஸ்தானத்தை குறிக்கும். எனவே, இரண்டு ஆதிபத்தியத்திற்கு உரிய கிரகம் லக்ணாதிபத்தியத்தை எடுக்கும். எனவே, இந்த ஜாதகர் (மோடி)எதிர்ப்புகளை வீழ்த்தி வெற்றி அடைவார்.

மோடி விருச்சகராசி, விருச்சக லக்கணம் உடையவர். தற்போது லக்ணாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கிறார். ஐந்து குடைய பூர்ய புண்ணியாதபதி குருவின் சாரமான விசாகம் 4ம் பாதத்தில் அமர்ந்துள்ளார். எனவே, வரவிருக்கிற செவ்வாய் திசை மேலும் 7 ஆண்டுகளுக்கு சாதகமாக உள்ளது.

லக்ணத்திற்கும் 6ம் இடத்திற்கும் உரிய செவ்வாய் லக்ணத்தில் ஆட்சி பெற்றுள்ளார். எனவே, எதிரிகளை வீழ்த்தி இந்த லக்ணாதிவதியான மோடி அமோக வெற்றி அடைவார். செவ்வாய் என்பது காவல்துறை மற்றும் ராணுவத்தை குறிக்கும். எனவே, அடுத்த 7 ஆண்டுகளில் ராணுவத்துறையில் இந்தியா பலப்படும். விவசாயம் செழிக்கும். என ஜோதிடர் ஹரி தெரிவித்துள்ளார்.

 

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்5 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்5 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்5 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்6 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்6 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்6 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்19 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending