Home சற்றுமுன் முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்கவைப்பேன்- ரஜினி

முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்கவைப்பேன்- ரஜினி

முகமது யாசின் என்ற சிறுவன் ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் 2ம் வகுப்பு படிக்கும் இச்சிறுவன் சில தினங்கள் முன் கீழே கிடந்த 50000 ரூபாயை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

சிறுவனின் நேர்மையை பாராட்டிய காவல்துறையினர் அச்சிறுவனின் ஆசையான தான் ரஜினிகாந்த்தை பார்க்க வேண்டும் என்ற அவனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ரஜினிகாந்த்தை சந்திக்க வைத்தனர்.

அச்சிறுவனுக்கு தங்க சங்கிலி பரிசளித்த ரஜினி யாசினை என் பிள்ளையாக நினைத்து அவன் கல்விக்கு தேவையான உதவிகளை செய்வேன் என கூறியுள்ளார்.

வரும் 19ம்தேதி  மாவட்ட காவல்துறை சார்பில் யாசினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.