ரீமேக் படங்களை இயக்குவதில் வல்லவராக பார்க்கப்பட்டட மோகன்ராஜா, சொந்தக்கதையில் தனி ஒருவன், வேலைக்காரன் என இரண்டு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டை அதிர வைத்தார். அடுத்து என்ன படத்தை உருவாக்குவது என தீவிரமாக யோசித்து வந்தவருக்கு சூப்பரான ஐடியாக கிடைத்துள்ளது.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தான் 25 வயதில் இருந்த போது தன்னுடைய பேங்க் அக்கவுண்டில் ரூ 500 தான் இருந்தது, ஆனால், இன்று தான் போர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு மோகன் ராஜா ‘சார் எனக்கு சூப்பர் கதை இந்த டுவிட் மூலம் கிடைத்துவிட்டது’ என்று கிண்டலாக பதில் டுவிட் கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.