இராமாயணம் ரூ.500 கோடி, மகாபாரதம் ரூ.1000 கோடி: என்ன நடக்குது இந்திய சினிமாவில்?

‘பாகுபலி 2’ திரைப்படம் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததால் இந்திய திரையுலகினர் இடையே பெரிய பட்ஜெட் பட வியாதி ஆட்டி வைக்கின்றது. ஏற்கனவே ‘2.0’, சங்கமித்ரா ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் தயாராகி வரும் நிலையில் இராமாயணம் கதையை ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக பாலிவுட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் கேரள பட நிறுவனம் ஒன்று ரூ.1000 கோடி பட்ஜெட் படம் ஒன்றை அறிவித்துள்ளது. மகாபாரத பீமன் கேரக்டரில் மோகன்லால் நடிக்கும் இந்த படத்தின் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கவுள்ளார்களாம். அவர்களில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் நாகார்ஜூனன் ஆகியோர்களும் அடங்குவர். இதில் நாகார்ஜூனனுக்கு கர்ணன் வேடம் என்று கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் இரண்டு வருடத்தில் இந்த படத்தை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் சுதந்திர தினத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.