Home சற்றுமுன் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு...

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு!

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 2017-ம் ஆண்டு 50 சதவீதம் அதிகரித்து 7,000 கோடி ரூபாய் ஆக உள்ளதாகச் சுவிஸ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாகச் சுவிஸ் வங்கியில் இருந்து இந்தியர்களின் பணம் குறைந்துவந்த நிலையில் 2017-ம் ஆண்டு அதிகரித்தது எப்படி என்று கேள்விகள் எழுந்துள்ளது.

2016-ம் ஆண்டுச் சுவிஸ் வங்கியில் இருந்து இந்தியர்களின் பணம் 45 சதவீதம் சரிந்து 4,500 கோடி ரூபாய் மட்டுமே இருந்தது. 1987-ம் ஆண்டு முதல் சுவிஸ் வங்கியில் மிகப்பெரிய சரிவு என்று கூறப்பட்டது. ஆனால் அது மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.

இந்திய அரசு சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தினை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தின் மதிப்பில் என்ஆர்ஐ-கள் டெபாசிட் எல்லாம் கணக்கில் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.