சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான பெண்ணுக்கு காலையில் திருமணம் நடந்த நிலையில் மாலையில் அழகான ஆண் குழந்தையை பெற்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட அந்த பெண் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். மரம் வெட்டும் தொழில் செய்யும் தனது பெற்றோருடன் சேர்ந்து பல ஊர்களுக்கு மரம் வெட்டி வந்துள்ளார் அவர். இதனையடுத்து அந்த பெண்ணுக்கு உறவினர் மூலமாக ஈரோட்டை சேர்ந்த சரவணன் என்பவரை கடந்த 30-ஆம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.

கோவிலில் வைத்து திருமணத்தை முடித்துவிட்டு மணமக்கள் வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அந்த பெண் மயக்கமடைந்து விழுந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறக்கும் எனவும் கூறினர்.

இதனால் மணமகன் சரவணன் அதிர்ச்சியடைந்து தன்னை மணமகள் குடும்பத்தினர் ஏமாற்றிவிட்டதாக கூறி திரும்பி தனது ஊருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து இரவு 9 மணியளவில் அந்த பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பதை விசாரிக்க ஆரம்பித்தனர்.

அதில், எட்டு மாதங்களுக்கு முன்னர் அந்த பெண் தனது பெற்றோருடன் திருக்கோவிலூரிலுள்ள ஒரு தோப்புக்கு தைல மரங்களை வெட்டி ஆலைக்கு அனுப்பும் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது 36 வயதான சின்ராஜ் மற்றும் 26 வயதான பிரபு என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூலமாகத் தான் கருவுற்றதாகத் தெரிவித்துள்ளார் அந்த பெண் என்ற தகவல் கிடைத்தது.

இதைனையடுத்து, நேற்று முன்தினம் சின்ராஜ் மற்றும் பிரபு ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.