Mother Arrest

பெற்ற மகனுக்கு தாயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற மகளென்றும் பாராமால் தந்தையே பல வருடங்களாக மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவங்களை நாம் சமீப காலமாக கேள்வி பட்டு வருகிறோம்.

இந்நிலையில், பெற்ற தாயே தன் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அந்த மகன் 4 வயது குழந்தை என்பது மேலும் கொடுமை.

அமெரிக்காவில் வசிக்கும் கிரிஸ்டல் என்ற பெண்ணுக்கு 4 வயது மகன் இருக்கிறான். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் தான் பெற்ற மகன் மற்றும் 4 வயது குழந்தை எனவும் பார்க்காமல் அவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை புகைப்படமும் எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதால், கிரிஸ்டல் கைது செய்யப்பட்டார்.