நான் கடவுள் படத்தில் நடித்த கொடூர வில்லன் ராஜேந்திரன் அப்படத்திற்கு பிறகு சில படங்களில் வில்லனாக தொடர்ந்து நடித்தார்.

ஆனால் திடீரென காமெடி கலந்து இவர் செய்த வில்லத்தனம் காரணமாக அதிகமான காமெடி படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.இவர் காமெடி நடிப்புக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்த வகையில் கருப்பு காக்கா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பேய்களை பற்றிய ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளராக ராஜேந்திரன் நடிக்கிறார், ஜார்ஜ், டாப்பா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை தருண் பிரபு என்பவர் இயக்கியுள்ளார் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது