தயாரிப்பாளர் ஆகிவிட்டார் ‘மொட்டை’ ராஜேந்திரன்

பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஸ்டண்ட் நடிகர் ராஜேந்திரன் அதன் பின்னர் வேதாளம், தெறி உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இந்த நிலையில் ‘எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா’ என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரன் முதன்முதலாக தயாரிப்பாளர் கேரக்டரில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் கெவின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் அகில் என்பவர் ஹீரோவாக நடிக்க ஷாரா நாயர், ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா ஆகிய நான்கு நடிகைகள் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நாயகன் அகில் ஹீரோவாகவும், அவரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர் கேரக்டரில் மொட்டை ராஜேந்திரனும் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து உருவாக்கிய படம் வெற்றி பெற்றதா? தோல்வி அடைந்ததா? என்பதே இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.