ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படத்தை திரைத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள் பெரிதும் ரசித்து பாராட்டி வருகின்றனர்.

இன்று வெளியான பேட்ட படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினி ஸ்டைலை இப்படத்தில் பார்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேபோல், திரைத்துறையை சேர்ந்த பலரும் பேட்ட படத்தை டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ பேட்ட. முழுமையான மாஸ் மூட். ஸ்டைலிஷ், எனர்ஜிடிக் ரஜினியை திரையில் பார்த்தேன். அனிருத்தின் பின்னணி இசை வேற லெவல். முழுமையான தலைவர் படம். கார்த்திக் சுப்புராஜுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு “ பேட்ட படம் ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம்… என்னையும் சேர்த்து.. ஒரே ஒரு வார்த்தை தலைவர்.. கார்த்திக் சுப்புராஜ் நீங்கள் எங்களுக்கு கிடைத்த திறமையான இயக்குனர். திருவின் ஒளிப்பதிவு அருமை” என பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  'பேட்ட' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காசியில்!

மு.க. அழகிரியின் மகன் தயா அழகிரி “தலைவர் வேற லெவல். இந்த மனுஷன்.. அய்யயோ காட்சிக்கு காட்சி செம.. முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி.. மீண்டும் இரவு காட்சிக்கு போறேன். திரும்பவும் ரசிச்சு சாப்பிடுவேன்… இந்த படம் எனக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என்பதை எத்தனை டிவிட் போட்டாலும் விவரிக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அல்வா வாசுவிற்கு அஞ்சலி செலுத்தக்கூட செல்லாத வடிவேலு....

அதேபோல், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் தனது டிவிட்டர் பக்கத்தில் “சிறப்பான தரமான சம்பவம். தலைவரை இப்படி பார்ப்பதில் மகிழ்ச்சி.. அதே ஸ்டைல்.. அதே கெத்து. படத்தை மிஸ் பண்ணாம பாருங்” என பதிவிட்டுள்ளார்.

பல நடிகர்களும் தொடர்ந்து பேட்ட படத்தை பாராட்டி டிவிட் செய்து வருகின்றனர்.