பேட்ட படத்தின் முதல் பாதியை ஒப்பிடும் போது, இரண்டாம் பகுதி சரியில்லை என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று வெளியான பேட்ட படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினி ஸ்டைலை இப்படத்தில் பார்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், திரைத்துறையை சேர்ந்த பலரும் பேட்ட படத்தை டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். பேட்ட படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு ரஜினிக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  அயோக்யா படம் எப்படி? - டிவிட்டர் விமர்சனம்

அதேநேரம், படத்தின் முதல் பாதியை சினிமா விமர்சகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினாலும், 2ம் பாதியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இடைவேளைக்கு பின் படம் ஏமாற்றத்தை தருகிறது. 2ம் பாதி மிகவும் நீளமாகவும் இருக்கிறது. எடிட்டிங்கில் பல காட்சிகளை வெட்டியிருக்கலாம். முதல் பாதியில் ரசிக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ் 2ம் பாதியில் ஏமாற்றியுள்ளார். ரஜினி போன்ற ஹீரோவுக்கு பெரிய வில்லன் இருக்க வேண்டும். ஆனால், வில்லனாக நவாசுதின் சித்திக்கை ஏற்க முடியவில்லை. விஜய் சேதுபதியையும் வீணடித்து விட்டனர். ஏராளமான காட்சிகளில் லாஜிக்கே இல்லை என விமர்சனம் செய்து வருகின்றனர்.