அண்ணன் – தங்கை இடையே காதல் : சர்ச்சையை கிளப்பும் சினிமா

பாலிவுட்டில் ஒரு வித்தியாசமான காதல் அம்சம் கொண்ட திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கண்டதும் காதல், காணமலே காதல் என பல காதல் கதைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணுக்கும், அவரின் சகோதரனுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆனால், இது தமிழில் அல்ல பாலிவுட்டில். ‘ஐ ஆம் ரோஷினி’ என்கிற படத்தில்தான் பொருந்தா காதலை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது.

இந்திய சினிமாவில் இதுவரை யாரும் தொடாத கதைக்களம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கண்டிப்பான பெற்றோர், ஏமாற்றுப் பேர் வழியான காதலன், காம வெறி பிடித்த மாமா, இந்த சூழ்நிலையில் உள்ள ஒரு இளம் பெண் தனக்கு ஆறுதலாகவும், தன்னோடு அன்பாகவும் பழகும் தனது சகோதரன் மீது காதல் கொள்கிறாள் என பயணிக்கிறது இப்படம்.

ஆனால், இப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள  இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் தாமஸ் “ இப்படம் பொருந்தாக் காதல் கதைதான். ஆனால், தவறான காட்சிகள் எதுவும் இடம் பெறாது. ஆதரவாக பழகும் அண்ணன் மீது தங்கைக்கு ஏற்படும் அன்பைத்தான் படமாக்கியுள்ளோம்.  இப்படம் சமூகத்திற்கு நல்ல ஒரு கருத்தை சொல்லியிருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.