கவுதம் கார்த்திக் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் நேற்றுடன் அவர் நடித்து வந்த இன்னொரு திரைப்படமான Mr.சந்திரமெளலி படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது

முதல் முறையாக கவுதம் கார்த்திக் தனது தந்தை கார்த்திக்குடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மிமி கோபி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது