Home சற்றுமுன் எப்படி இருக்கு மிஸ்டர் சந்திரமெளலி திரைப்படம்

எப்படி இருக்கு மிஸ்டர் சந்திரமெளலி திரைப்படம்

சந்திர மெளலி என்ற பெயரை என்றும் மறக்க முடியாது அந்த அளவு மாஸான பெயர் இது, மெளன ராகம் படத்தை பார்த்தவர்கள் இதை மறந்திருக்க முடியாது

ஜெயம் ராஜா ஆரம்பத்தில் ஜெயம் ரவியை வைத்து மட்டுமே இயக்கி கொண்டிருந்தார் அதுபோல இயக்குனர் திரு. திரு அவர்கள் விஷாலை வைத்து மட்டுமே தொடர்ந்து படம் இயக்கி கொண்டிருந்தார்.

இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்டு கெளதம் கார்த்திக்குடன் கை கோர்த்திருக்கிறார் திரு.

வரலட்சுமி சிறிது நேரமே வந்தாலும் ரசிக்கும்படியான கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறாராம்.

கதாநாயகி ரெஜினா சற்று அதிக கவர்ச்சியுடன் நடித்திருப்பதாக தெரிகிறது.

கால் டாக்ஸி கம்பெனிகளுக்குள் ஏற்படும் போட்டி அதை காமெடி கலந்து கொஞ்சம் சஸ்பென்ஸ் விறுவிறுப்பு திடீர் திருப்பம் என கொடுத்திருக்கிறாராம் இயக்குனர்.

தந்தை மகனாக கார்த்திக்,கெளதம் கார்த்திக் அசத்தியிருக்கிறார்களாம்.

கொஞ்சம் சஸ்பென்ஸோடு கதை நகர்ந்தாலும் திரு முன்பு இயக்கிய சமர், நான் சிகப்பு மனிதன் பட பாணியில் சில காட்சிகள் அமைந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

திரைக்கதை இன்னும் கொஞ்சம் நன்றாக அமைத்திருந்தால் சிறப்பு என்பதும் இவர்கள் கருத்து.

மொத்தத்தில் மோசமில்லை ஒரு முறை பார்க்க கூடிய படம் என்பதே ரசிகர் கருத்து .