மன்னன் படத்தில் தழுவல்தான் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் என கருத்துகள் சமூகவலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது.

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சதிஷ், தம்பி ராமையா, எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் மே 17 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. இந்தப்படம் ரஜினி நடிப்பில் உருவான மன்னன் படத்தின் காப்பி என சமூகவலைதளங்களில் கருத்துகள் கூறப்பட்டன. சமீபத்தில் வெளியான் டீசர் மற்றும் டிரைலரில் உள்ளக் காட்சிகளும் வசனங்களும் அதை உறுதிப்படுத்துவது போலவே இருந்தன.

இன்று வெளியாகியுள்ள டக்குன்னு டக்குன்னு பாடலிலும் சிவகார்த்திகேயன் ரஜினியைப் போலவே நடித்திருப்பதால் அந்த சந்தேகம் மேலும் அதிகமாகியுள்ளது. எனவே மிஸ்டர் லோக்கல் மன்னன் படத்தின் காப்பிதான் என மீண்டும் பேச்சுகள் அதிகமாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து மிஸ்டர் லோக்கல் படக்குழு எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது.