மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் மிக சுமாரான வரவேற்பையேப் பெற்றுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சதிஷ், தம்பி ராமையா, எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இன்று இந்தப்படம் வெளியாகி முதல்நாள் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் படம் பற்றி கலவையான விமர்சன்ங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

ரசிகர்களின் ஒரு வரி விமர்சனம்

  • படம் நல்லா இருக்கு.. ஆனா எதிர்பார்த்த அளவு இல்ல… நயந்தாரா ஆக்டீங் சூப்பர்
  • காமெடி வொர்க் அவுட் ஆகல…. ரோபோ ஷங்கர் & சதீஷ் ஏமாத்திட்டாங்க
  • சந்தானம் இல்லாம ராஜேஷ் படம் இல்ல… ராஜேஷ் நல்ல ஸ்க்ரிப்டா ச்சூஸ் பண்ணனும்
  • அட ஒன்னுமே இல்ல விடுங்க…. ரிமோட் இருந்தா ஓட்டி விட்ருப்பன்
  • நயன்தாராவுக்காகதான் வந்தேன்.. ஆனா அவங்க ரோல் மட்டும் நல்லா இருக்கான்னு பாத்துட்டு ஓகே சொல்லி இருப்பாங்க போலருக்கு
  • சொல்ற அளவுக்கு ஒன்னுமில்ல.. ராஜேஷுக்கு காமெடி செட் ஆகல.. சிவகார்த்திகேயன விட யோகி பாபுதான் சூப்பர்
  • பேமிலியோட எஞ்சாய் பண்ணிப் பாக்கலாம்