மொ்சல் படக்குழுவிக்கு மிரட்டல் விடும் இணையதளம்!

03:51 மணி

தமிழ்சினிமாவை ரொம்பவும் ஆட்டி படைப்பது திருட்டு விசிடி மற்றொன்று தமிழ் ராக்கா்ஸ் ஆன் லைன் இணையதளம். இந்த இரண்டும் தீராத தலைவலி கொடுத்து கொண்டிருக்கிறத தமிழ் சினிமாவுக்கு. அதுவும் ஆன் லைன் மூலம் படம் வெளியாகும் அன்றோ அல்லது அதற்கு முன்பாகவே படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டு வருவது தமிழ் ராக்கா்ஸ் மற்றும் தமிழ்கன் இணையதளம்.

இந்நிலையில் தற்போது மொ்சல் படத்திற்கு மிரட்டல் வெளியிட்டுள்ளது. ஹெச்டி பிரிண்ட்டோடு படம் வெளியாகும் அன்று படத்தை வெளியிட போகிறோம் என தமிழ் ராக்கா்ஸ் இணையதளம் மிரட்டல் விடுத்துள்ளது.

ஏற்கனவே தமிழ்கன் இணையதளத்தளம் கைது செய்து பட்டது என செய்திகள் வந்தது. அந்த இணையதளம் அட்மின் தொடா்பாக கவுாி சங்கா் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்ன தான் இவா்கள் விழுந்து விழுந்து போராடினாலும் இணையதளங்களில் படம் வெளிவருவது இன்னும் நின்றபாடில்லை. திருட்டுத்தனமாக படத்தை வெளியிடும் இணையதளங்களில் தொடா்ந்து தன் பணியை செவ்வனே செய்து வருகிறது. படத்தை வெளியிட்டு வருகிறது அந்த இணையதளங்கள்.

மொ்சல் படத்தை விஜய் ரசிகா்கள் அநேக எதிா்பாா்ப்புடன் காத்து கிடக்கின்றனா். மொ்சல் டீசா் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி மிரட்டல் விடுத்துள்ள காரணத்தால் மொ்சல் படக்குழுவினா் பெரும் அதிா்ச்சிக்கு தள்ளப்பட்டுள்ளனா். ஏற்கனவே படத்தின் தலைப்புக்கு தடைகோாி வழக்கு வேற தொடரப்பட்டுள்ளது. தற்போது இது வேற புது சிக்கல் வந்துள்ளது. இதை தடுப்பதற்கு பல்வேறு வழிகளை தேடி ஆராய்ந்து வருகிறது மொ்சல் படக்குழு. இதற்கு ஆதரவாக தயாாிப்பாளா்கள் சங்கம் உறுதுணையாக செயல்படுகிறது.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com