Biggboss Mugen angry vanitha vijayakumar – பிக்பாஸ் வீட்டில் நடிகை வனிதா விஜயகுமாரை பிக்பாஸ் போட்டியாள்ர் முகேன் அறைந்ததாக செய்திகள் கசிந்துள்ளது.

சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற வனிதா விஜயகுமார், அபிராமியிடம் நீ முகேன் பின்னால் சுத்தாதே. அவன் உன்னை ஜீரோ ஆக்கிவிட்டு அவன் ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கிறான் என அறிவுரை செய்தார். இதையடுத்து, அபிராமிக்கும், முகேனுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இது தொடர்பான புரமோ வீடியோக்களும் இன்று வெளியானது.

ஏற்கனவே அபிராமி மீதுள்ள கோபத்தில் கட்டிலை உடைத்த முகேன், ஆத்திரத்தில் சேரை எடுத்து அபிராமியை அடிக்க பாய்ந்த வீடியோவும் வெளியானது. எனவே, வன்முறையாக நடந்து கொள்பவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதால் விரைவில் முகேன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அபிராமியை வனிதா தூண்டி விட்ட ஆத்திரத்தில், வனிதாவை முகேன் பளார் என அறைந்து விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த காட்சி மக்கள் பார்வைக்கு ஒளிபரப்பப்படுமா இல்லை மறைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.