ரஜினியின் மகள் சவுந்தர்யா – விஷாகன் திருமண வரவேற்பு விழாவில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.

சவுந்தர்யா – விஷாகன் திருமணம் நேற்று காலை சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பிஎஸ், கமல்ஹாசன், வைகோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதேபோல், நேற்று மாலை அதே ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும், ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதேபோல், சௌந்தர்யா மற்றும் விஷாகனின் நண்பர்கள் மற்றும் தனுஷ், பாலிவுட் நடிகை காஜல், திவ்ய தர்ஷினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல், முகேஷ் அம்பானி அவரின் மனைவி நீடா அம்பானி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

முகேஷ் அம்பானி நேற்று மாலை ஸ்டாலினை சந்தித்து தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழையும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.