இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராரும், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி, திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று இரவு சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் அவரின் மனைவி நீடா அம்பானி ஆகியோர் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தனர். அதன்பின், திமுக தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு வந்து அவரை சந்தித்தனர்.

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடந்தது. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் வருகிற மார்ச் மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது.

எனவே, அதற்கு பத்திரிக்கை கொடுக்கவே முகேஷ் அம்பானி வந்தார் எனக்கூறப்படுகிறது. ஆனாலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முகேஷ் அம்பானி ஸ்டாலினின் வீட்டிற்கே வந்து சென்ற விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.