இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்பவர் முகேஷ்
அம்பானி. இவரின் மகள் ஈஷா அம்பானியின் திருமண
நிச்சயதார்த்த விழா இத்தாலியில் உள்ள வில்லா
பால்பினோவில் நட்சத்திர விடுதி ஒன்றில் மிகப்
பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கடந்த மே மாதம் தான் இஷா அம்பானியின் சகோதரர் ஆகாஷ்
அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே
நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில், பிரமால் நிறுவனத்தின் அதிபரான ஆனந்த்
பிரமால் தொழிலதிபருக்கும், முகேஷ் அம்பானியின் மகளான
ஈஷா அம்பானிக்கும் இத்தாலியில் உள்ள லேக் கோமோ உள்ள
வில்லா பால்பினோ நட்சத்திர விடுதியில் மிகப்
பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம்
நடைபெற்றுள்ளது.

இந்த நிச்சயதார்த்தத்தில், சிறப்பு விருந்தில் நடன
நிகழ்ச்சிகள்,பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன.

இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களான அமீர் கான்,
பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர் உள்ளிட்டோரும், ஹாலிவுட்
பிரபலங்களான நிக் ஜோனஸ் மற்றும் ஜான் லெஜன்ட்
உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.