ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றுள்ள  மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த ஊர்வலமாக சென்று கோப்பையை மக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.

ஐபிஎல் 12 ஆவது சீசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 4 ஆவது முறையாகக் கோப்பையை வென்று அதிகமுறைக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது மும்பை அணி.

இதையடுத்து தனது ஊருக்கு சென்ற மும்பை அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையோடு திறந்த பேருந்தில் மும்பையின் முக்கியப் பகுதிகளுக்கு ஊர்வலமாக சென்றனர். சாலையெங்கும் திரண்டிருந்த மக்கள் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்

இதையும் படிங்க பாஸ்-  ஏழாவது முறையும் வெற்றி - சாதனையைத் தக்க வைத்த கோஹ்லி & கோ !