மசாஜ் செண்டர் என்கிற பெயரில் விபச்சாரம் செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை கிழக்கு அந்தேரி பகுதியில் அமைந்துள்ள இடம் ஷாகி நாகா. இங்குள்ள பெனிசுலா கிராண்ட் என்கிற ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருகு தகவல் கிடைத்தால், அங்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஸ்பா என்கிற பெயரில் விபச்சார விடுதி ஒன்று செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இதன் உரிமையாளர் ரஜ்னீஷ் சிங் (30) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் லோயர் பரேல் என்கிற பகுதியில் ஒரு கால் செண்டரை நடத்தி வருகிறார். அங்கு வரும் வாடிக்கையாளர்களை ஆசை வார்த்த கூறி தனது விடுதிக்கு அழைத்து சென்று அவர் விபச்சாரம் செய்து வந்துள்ளார். மேலும், வாடிக்கையாளர் விரும்பினால் அழகிகளை வீட்டிற்கே அவர் சப்ளை செய்துள்ளார். அவரிடமிருந்த அழகிகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.