ரஞ்சித்-ரஜினி அடுத்த படம் ; சென்னையில் உருவாகி வரும் செட்

12:40 மணி

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்காக சென்னையில் மும்பை போன்ற செட் தயாராகி வருகிறது.

ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை மும்பையில் வாழ்ந்த ஹாஜி மஸ்தான் என்பவரின் கதை என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவலை ரஞ்சித் படக்குழு மறுத்தது.

இந்நிலையில், ரஞ்சித் படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் மும்பை தாராவி போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இம்மாத்தின் இறுதியின் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த படம் ஹாஜி மஸ்தானை பற்றிய கதையாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

நாயகன் படத்தை இயக்கிய மணிரத்னம், மும்பை தாராவியை சென்னையில் செட் போட்டுதான் படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 22 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com