பிக்பாஸ்2 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே வாரம் மட்டுமே உள்ள நிலையில் இந்த வாரம் எவிக்சனில் யார் வெளியேறுவார்கள் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செண்ட்ராயன் வெளியேறினார்.

சரி இந்த வாரமாவது ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேறுமா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளார். அப்படியானால் யார் வெளியேறுகிறார் என நினைக்கிறீர்களா? மும்தாஜ் தான் அந்த நபர். ஓட்டு போட்ட மக்களுக்குதான் தெரியும் இந்து எப்படி என்று?. ஆனால் இதற்கும் ஒரு கதை சொல்வார் கமல்ஹாசன். பார்ப்போம் இன்று இரவு பிக்பாஸில்