முந்தானை முடிச்சு தவக்களை மாரடைப்பால் மரணம்

முந்தானை முடிச்சு நடிகர் தவக்களை மாரடைப்பால் இன்று தனது வீட்டில் மரணம் அடைந்தார்.

1983-ஆம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் தவக்களை.இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.இதனைத் தொடர்ந்து பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார் . மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சென்னை வட பழனியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இன்று தனது வீட்டில் மரணமடைந்தார். இவரின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.