ஊழல் கட்சி திமுக என விமர்சனம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை பற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியாகி உள்ளது.

“பாஜகவின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து கலைஞானி பிதற்ற தொடங்கியுள்ளார். ஆளானப்பட்ட புரட்சி நடிகர்கள் கூட கடந்த காலங்களில் வருமானவரித்துறை அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு பயந்து அவர்களை வளர்த்த கட்சியின் மார்பில் பாய்ந்த வரலாறு தெரிந்தவர்கள் நாம். வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என்ற ஹனீபாவின் வெண்கல குரலில் நாம் பாடி கேட்டிருப்போம். அதனை எதிர்த்துப் போராடி இயக்கத்தை காப்பாற்றியவர்கள் நாம்! நம்மை இந்த “பூம் பூம் காரனின் மாடு என்ன செய்துவிடும்”. திமுக தலைவர் கருணாநிதி சொல்வது போல் புலி வேட்டைக்குச் செல்பவன், பன்றிகள் வீசும் சேற்றைப் பற்றி கவலைப்பட கூடாது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.