திமுகவின் நாளிதழான முரசொலியில் சிலந்தி எனும் பகுதியில், ஹீ ஈஸ் தி பிளாக் ஷீப் மே…எனும் தலைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்த அறிக்கையை குறித்து ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில், ரஜினி ரசிகர்கள் அவர்மீது அதிருப்தியில் உள்ளதுபோன்றும், நக்கல், நைய்யாணடியுடனும் எழுதப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில், வெறும் ரசிகர்மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கையை கிண்டல் செய்யும் விதமாக முரசொலியில் கட்டுரை வந்தது. இதைவைத்து, செய்தி தொலைக்காட்சிகள் விவாதம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று வெளிவந்த முரசொலியில் இந்த கட்டுரை குறித்து முரசொலி நிர்வாகம் ஒரு விளக்கம் அறித்துள்ளது. அதில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.