சென்னையில் தனது அண்ணன் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட நண்பனை வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாரதிராஜா என்னும் இளைஞன் தனது நண்பன் ரங்கநாதனுடன் வசித்து வந்தார். அதே நேரத்தில் வார இறுதி நாட்களில் அண்ணா நகரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு ஓவ்வொரு வாரமும் பாரதிராஜா செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது தனது நண்பன் ரங்கநாதனையும் அழைத்து செல்வான்.

இதையும் படிங்க பாஸ்-  இளம்பெண் விரட்டி விரட்டி குத்திக்கொலை - வாலிபர் வெறிச்செயல்

இதனால் பாரதிராஜாவின் அண்ணன் குடும்பத்துடன் ரங்கநாதன் நல்ல நெருக்கமானான். இதனால் பாரதிராஜாவின் அண்ணன் மனைவியுடனும் ரங்கநாதனுக்கு நெருக்க ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரங்கநாதன், பாரதிராஜாவின் அண்ணியுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  உன் பொண்டாட்டி செம - நண்பரின் மனைவியை வர்ணித்ததால் விபரீதம்

இதனை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பாரதிராஜாவிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து ரங்கநாதனை பாரதிராஜா எச்சரித்துள்ளார். நானும் எனது அண்ணனும் இல்லாத நேரத்தில் ஏன் நீ வீட்டுக்கு செல்கிறார் என கேட்டுள்ளார். ஆனால் ரங்கநாதன் ஏன் வரசொன்னீங்கன்னு உங்க அண்ணியை போய் கேளு, நான் போகக்கூடாதுன்னு சொல்லாதே என கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதில் போட்டி - அமைச்சர் உறவினர்கள் மோதல்

இதனால் கடந்த இரண்டு மாதமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை ரங்கநாதன் தனது அண்ணியை சந்தித்தது பாரதிராஜாவுக்கு தெரியவர, அன்று மதியம் மது அருந்திவிட்டு ரூமுக்கு சென்று தூங்கிக்கொண்டிருந்த ரங்கநாதனின் தலையில் இரும்பு ராடால் அடித்துள்ளார். இதனால் ரங்கநாதன் அந்த இடத்திலேயே இறந்துள்ளார். இதனையடுத்து பாரதிராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.