ஏழாம் அறிவு படத்தில் தனது நோக்கு வர்மத்தாலேயே அனைவரையும் மிரட்டியவர் நடிகர் ஜானி ட்ரை ஙுயென். நாய்க்கு ஊசி போடுவதில் இருந்து போலீஸ் ஸ்டேசனில் அனைவரையும் கொல்வது என வெறும் கண்ணை மட்டும் வைத்து பார்வையாலே மிரட்டி இருப்பார்.

ஏழாம் அறிவு வெற்றிக்கு பின் மீண்டும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்க்கார் படத்தில் இணைகின்றன இந்த கூட்டணி, ஏற்கனவே வெயிட்டான வில்லன்கள் பழ.கருப்பையா,ராதாரவி என இருவர் இப்படத்தில் இருந்தாலும் இவரின் வில்லத்தனமும் ரசிக்கும்படி இருக்குமாம்.