சர்கார் பட விவகாரத்தில் முருகதாஸ் வருண் ராஜேந்திரனுக்கு கொடுத்த வாக்கை காப்பற்றி உள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து இன்று வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். முதலில் இதனை மறுத்த முருகதாஸ் நீண்ட இழுபறிக்கு பின்னர் இதனை ஒப்புக்கொண்டார். மேலும் வருண் ராஜேந்திரனின் திறமையை பாராட்டி அவருக்கு படத்தில் 30 செகண்டிற்கு கார்ட் போடுவதாக கூறியிருந்தார்.

அதன்படி இன்று வெளியான சர்கார் படத்தின் தொடக்கத்தில் வருண் ராஜேந்திரனுக்கு 30 செகண்டிற்கு கார்ட் போடப்பட்டிருக்கிறது.