தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். தினாவில் தொடங்கி கத்தி வரை அனைத்து படங்களும் சூப்பர் ஹிட். ஹிந்தியிலும் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் அவர். தற்போது ஸ்பைடர் படத்தை முடித்து விஜயை இயக்க தயாராகி வருகிறார்.

ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ரஜினியுடன் ஒரு படம் செய்ய வேண்டும் என்பது கனவாக இருக்கும். முருகதாஸ் மட்டும் விதி விலக்கா என்ன. ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் சில ஆண்டுகளுக்கு முன் ரஜினியிடம் ஒரு கதை கூறினேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த திட்டம் கை கூடாமல் போனது. இப்பொழுதும் ரஜினிக்காக ஒரு கதை வைத்துள்ளேன். காலம் வரும்போது ரஜினியை இயக்குவேன் என்று கூறினார்.